திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பணிபுரியும் காவல் துறையினருக்கு தேர்தல் இணையதளம் மூலம் களைத்து பிரித்தல் நிகழ்வு.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பணிபுரியும் காவல் துறையினருக்கு தேர்தல் இணையதளம் மூலம் களைத்து பிரித்தல் (சுயனெழஅணையவழைn) நிகழ்வு தேர்தல் பார்வையாளர் (காவல்துறை) முனைவர் எஸ்.டி.சரணப்பா மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடனிருந்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் 166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி, 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 510556 ஆண் வாக்காளர்களும், 535857 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்
திருத்துறைப்பூண்டி திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதிகள் என நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1183 வாக்குசாவடிகள் உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 72 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பதற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ள 72 வாக்குச்சாவடிகளுக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் காவல்துறை அலுவலர்களை மாவட்டத்துள்ள 1183 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திட. களைத்து பிரித்தல் (சுயனெழஅணையவழைn) பணியும் மேற்கொள்ளப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *