திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தின் தலைச் சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும்.
இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற பாடைக் காவடி நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இவ்வாண்டு கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி பூச் சொரிதல் விழா உடன் தொடங்கி, பத்தாம் தேதி முதல் காப்பு கட்டுதலும், 17ஆம் தேதி இரண்டாம் காப்பு கட்டுதளுடன், தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும், இரவு பல்வேறு இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று, கடந்த 24 ஆம் தேதி புகழ்பெற்ற பாடைக்காவடி திருவிழா நடைபெற்று,
31 ஆம் தேதி புஷ்ப பல்லக்கு விழாவும் நடைபெற்றது. நேற்று பங்குனி கடை ஞாயிறு விழாவை ஒட்டி காலை முதல் பாடைக் காவடி, அலகு காவடி ,பால் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை தங்கள் நேற்று எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்கள்.
காலை 11 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகஆராதனையும், மாலை ஆறு மணி அளவில் வரதராஜன் பேட்டை தெரு ஜி. எம். சேகர் நினைவாக, வலங்கைமான் ஆர். எஸ். கன்ஸ்ட்ரக்சன்,தொழுவூர் ஜி.குணசேகரனின் சிறுத்தை புலி சிலம்ப பள்ளி இணைந்து வழங்கும் தமிழ் மண்ணின் மங்காத மாபெரும் சிலம்பக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வலங்கைமான் ஆர். எஸ். கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர், முதல் நிலை ஒப்பந்தக்காரர் டாக்டர் ஆர். செல்வம் தலைமை வகித்தார், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் க. குமரன், ஆர். தங்கராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். தொழுவூர்ஊராட்சி மன்ற தலைவர் கே. முனுசாமி செந்தமிழ் செல்வி, வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவாசிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் தெருவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், மகளிர் குழுக்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் குமாரமங்கலம் கே. சங்கர், வலங்கைமான் ரோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் என். ராஜராஜ சோழன் கலந்து கொண்டனர்.
சிலம்பக்கலை போட்டியை வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை ஆலய செயல் அலுவலர் ஆ.ரமேஷ், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வழங்கினர். நிகழ்ச்சியை சிலம்பக் கலை ஆசான்கள் மணப்படையூர் எஸ். சுந்தரம், வெள்ள மதகு எஸ். சின்னையன், ஒன்பத்து வேலி ஏ. ஸ்டீபன், குடந்தை பேட்டைத் தெரு வேலன், மயிலாடுதுறை மூத்த ஆசான் எம் . ஜி. கணபதி ஆகியோர் முடித்து வைத்தனர்.
நிகழ்ச்சியை சிலம்பக்கலை ஆசான் ராஜ மணிகண்டன் குழுவினர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை சிலம்பக் கலை ஆசான், தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கம் திருவாரூர் மாவட்ட செயலாளர், தொழுவூர் கலை முதுமணி ஜி. குணசேகரன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜெயம் பி எம் தாஸ் வழங்கும் ராக நிலா இன்னிசை பொழுது என்ற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மதிய அபிஷேக ஆராதனை மற்றும் நிகழ்ச்சி உபயங்களை வலங்கைமான் தொழிலதிபர், முதல் நிலை ஒப்பந்தக்காரர் டாக்டர் ஆர்.செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர். ஆலயத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் பல இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் வலங்கைமான் காவல்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பேரூராட்சி மன்றம் சார்பில் சிறப்பான முறையில் சுகாதார பணிகளையும், சாலையில் தண்ணீர் தெளித்தல் உள்ளிட்ட பணிகளை செய்திருந்தனர். அம்மாபேட்டை புலவர் எம். பன்னீர்செல்வம், வலங்கைமான் ஓய்வு பெற்ற ஆசிரியர் புலவர் ப. ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர்கள்.விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், வரதராஜன்பேட்டை தெரு வாசிகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர், உபயதாரர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.