திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்..

தற்போது கோடைகாலமாக இருப்பதால் திருச்செங்கோடு மழையில் உள்ள குரங்குகள் மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது இதனை அறிந்த நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையினர் வன விலங்குகளுக்கு குடிநீர் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்

பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மலைக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

கோடைகால வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது இதனால் திருச்செங்கோடு மலைப்பகுதியில் பசுமையாக இருந்த பகுதிகள் காய்ந்து வருகின்றன இதன் காரணமாக வன உயிரினங்களுக்கு உணவு தேவை மற்றும் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால் குரங்கு மயில் போன்ற உயிரினங்கள் நகரப் பகுதிக்கு படையெடுக்க தொடங்கியுள்ளது

இதனை அறிந்தநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை உறுப்பினர்கள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள உயிரினங்களுக்கு கடந்த 40 நாட்களாக குடிநீர் தேவை மற்றும் தங்களால் முடிந்த உணவுத் தேவையான பூர்த்தி செய்து வருகின்றனர்.

கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த 40 நாளாக இன்று அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிமெண்ட் தொட்டிகளை அமைத்து இருசக்கர வாகனங்களில் குழுவாக மலையின் கீழ் புறத்திலிருந்தும், மேல் பகுதியில் இருந்தும் கேன்களில் தண்ணீர் கேன்களை கொண்டு வந்து தொட்டிகளில் நிரப்புகிறார்கள், தினமும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து தண்ணீரினை நிரப்பி வைக்கிறார்கள் மலையில் உள்ள குரங்குகள் மற்றும் பறவை இனங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது மேலும் வாரத்தில் மூன்று முறை வாழைப்பழங்களை உணவாக அளித்து வருகின்றனர்.

மேலும் கோடை காலம் முடியும் வரை இந்த உதவிகளை நாங்கள் செய்து கொண்டே இருப்போம் என நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்தனர் இதுகுறித்து நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை உறுப்பினர் தீபக் கூறும்போது திருச்செங்கோடு மலையில் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால் குரங்குகள் நகரப் பகுதியில் வந்து வீடுகளில் உணவு தேடுகிறது

எனவே நாங்கள் மாலைப்பகுதியில் உணவு மற்றும் குடிநீரை கொண்டு வந்து கொடுக்கிறோம் அதேபோன்று பக்தர்கள் தங்களால் முடிந்த அளவு பழங்களை கொண்டு வந்து குரங்குகளுக்கு வழங்க வேண்டும் மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு வண உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே பக்தர்கள் தெரியாமல் ஏதேனும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வந்தாலும் அதனை மலைப்பகுதிகளில் போடாமல் தங்களுடனே எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறினார் இந்த பணியில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு குடிநீர் மற்றும் உணவை விலங்குகளுக்கு வழங்கினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *