அம்பேத்கர் சிலைக்கு கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று (14/04/2024) அவரின் திருவுருவ சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி.

இந்தியா கூட்டணி வேட்பாளருமான கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்.

மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *