சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் அனைத்தும் வார்டுகளிலும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்
ஆ. தமிழரசி ரவிகுமார் பிரச்சாரம் செய்தார், இதில் தமிழக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறியும், பத்து ஆண்டுகாலம் ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றாத திட்டங்களை எடுத்துக் கூறியும் வாக்குகள் சேகரித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப.மதியரசன்,பேரூர் கழகச் செயலாளர் நஜுமுதீன் அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் காங்கிரஸ் பேரியக்க தலைவர்கள் அனைத்து தோழமைக் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்