பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இந்திய கூட்டணியின் சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக கட்சியின் வேட்பாளர் தொல் திருமாவளவனை ஆதரித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார்.
இதில் இந்திய தேசிய காங்கிரஸின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை , அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
செல்வப் பெருந்தகை வேட்பாளர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு வாக்கு சேகரித்த போது மக்களிடையே இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் 170 ரூபாய் வழங்குகிறார்கள்.
இந்திய தேசிய கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 400 ரூபாயாக சம்பளம் உயர்த்தி தரப்படும் என வாக்குறுதி அளித்தார்
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் பெண்களுக்கான, தொழிலாளர்களுக்கான, இளைஞர்களுக்கான உரிமைக்காக பாடுபடுகின்றனர் என உரையாற்றினார் எனவே சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களிடையே கேட்டுக்கொண்டார்
இந்த பிரச்சாரத்தின் போது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.