தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு முதல் நாளில் அருள்மிகு கைலாசநாதருக்கும் பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை நடை பெற்றது

அதிக பக்தர்கள் அதிகாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை வருகை தந்து கொண்டே இருந்தனர் வருகை தந்த பக்தர்களுக்கு கடமலை குண்டு S.தங்கம் வணங்காமுடி, வி.ரவி, லட்சுமிபுரம் ராமசாமி விநாயகர் கோயில் பூசாரி குடும்பாத்தார்கள் சார்பாக பிரசாதம் வழங்கபட்டது.

கைலாசபட்டிஇராஜ கம்பளம் தாரர்கள் பால்குடம் எடுத்து வந்து கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டது பின்பு காலையில் இருந்து கோயில் அடிவாரத்தில் சிறப்பான அன்னதானமும் வழங்கினார்கள். இன்று இரவு 8 மணியளவில் வளர்பிறை சப்தமி திதியன்று சப்தமாதக்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனைகளும் நடைப்பெற்றது.


ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *