இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் முத்தரசனுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பாக தி.மு.க.வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இதில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட தலைவர் ஆசிப், மாவட்ட செயலாளர் சக்திவேல்.மாவட்ட துணைத்தலைவர் ஷேவியர்,மாவட்ட துணைசெயலாளர் பிரபுதாஸ், மாவட்ட பொருளாளர் தேவ் ஆனந்த் நகர தலைவர் முகமது பாரூக். கோபி நகர தலைவா் முகமது அலி ஜின்னா, துணைசெயலாளர் தெளலத்.ஆகியோர் கலந்து கொண்டனர்..