சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தமிழக பத்திரப்பதிவு துறை மேற்கொண்டு வரும்நிலையில், முக்கிய தகவல் ஒன்று வட்டமடித்து வருகிறது.

ஆன்லைனிலேயே நத்தம் இணையவழி பட்டா மாறுதல் செய்ய முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. நத்தம் நிலம் தொடர்பான விவரம் ஆன்லைன் மயமாகிவிட்டதால், வழிகாட்டி மதிப்பு விரைவில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

உரிமையாளர்கள்: மேலும், அரசு வழங்கிய பட்டா மற்றும் பத்திர அடிப்படையில், உரிமையாளர் முழுமையான உரிமைகளையும் இனி எளிதாக பெற முடியும் என்றும் நம்பப்படுகிறது.. இதையடுத்து, 1.42 கோடி நத்தம் நில ஆவணங்கள், தமிழகத்தில் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டிருப்பதாக நில அளவைத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *