தனியார் நிறுவனம் மற்றும் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கிய 2.85 கோடி பணம்.

சென்னை பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரேடியல் சாலையில் பி.எல்.ஆர்.புளு மெட்டல்ஸ் என்ற ரெடிமிக்ஸ் மற்றும் ஜல்லி மணல் விற்பனை செய்யும் இடத்தில் ஐடி சோதனை நடைபெற்று 65 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது,

இந்நிறுவனம் பல்லாவரத்தை சேர்ந்த லிங்ஜராஜ் என்பவருக்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது.

அதே போல் அவரது பல்லாவரம், பெருமாள் நகர் வீட்டில் நடத்திய சோதனையில் 2.20 கோடி ரூபாய் என மொத்தம் 2.85 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

திருநீர்மலையில் இவருக்கு சொந்தமான கிரஷரிலும் சோதனை மேற்கொள்ளபட்டது, இவர் அதிமுகவை சேர்ந்தவர் உறுப்பினராக மட்டும் இருப்பதாக தகவல். பறிமுதல் செய்த பணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *