மதுரையில் சுட்டெரிக்கும் வெயில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….

வழக்கமாக ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில்தான் வெயிலின் உக்கிரத்தை பார்க்க முடியும். ஆனால் இந்த ஆண்டுஅதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கிறது.
மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
மதுரையில் 105 டிகிரிக்கு மேலும் வெப்பத்தின் அளவு பதிவானது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மேலும் 4 நாட் களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள் ளது. அதிலும் உள் மாவட்டங் களில் இதன் தாக்கம் அதிக மாகஇருக்கும் எனவும், இயல் பைவிட 2 முதல் 4 டிகிரி வரை அந்த பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக பதி வாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது, அசவுகரியமான நிலை ஏற்படும். இதனால் காலை II மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தென்மாவட்டங்கள், வட மாவட்டங்களை யொட்டிய மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக் கிறது

என்றும், மற்ற இடங் களில் எல்லாம் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதிக வெப்ப அலை வீசக்
கூடும் என்பதை உணர்த்தும் வகையில் நேற்று சில இடங்க ளுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ வானிலை ஆய்வு மையம் சார்பில் நிர்வாகரீதியிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பொதுவாக மழை காலங்களில், கனமழை பெய்யக்
கூடிய இடங்களுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை (அலர்ட்) விடுக்கப்படுவது வழக்கம். அதேபோல், வெயில் காலங்களிலும் ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்படும்.

அந்தவகையில் வெயில் காலங்களில் வெப்ப அலையினால் ஏற்படும் வெப்ப அளவுகளை பொறுத்து இந்த எச்சரிக்கை விடப்படும்.
தமிழ்நாட்டில் நேற்று 14 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு இருந்தது. அதிக பட்சமாக சேலத்தில் 108.14 டிகிரி பதிவாகியது. மதுரையில் எப்போதுமே பரபரப்பாக இயங்கும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பயணிகள் கூட்டமின்றி மதிய நேரங்களில் வெறிச்சோடி காணப்பட்டது. முக்கிய சாலைகளும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *