செங்குன்றம் செய்தியாளர்

கொளத்தூர் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் பணியாளர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டம். அனைத்து வித வேலைகளும் முடங்கியது.

வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் ஆய்வாளர் தவிர்த்து பிறப்பணியாளர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து தங்களது போராட்டத்தை அரசுக்கு கெதிராக வெளிப்படுத்தினர்.

இதில் குறிப்பாக சமீபத்தில் தமிழக அரசு தபால் மூலம் ஓட்டுனர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகனத்தின் பதிவு சான்றிதழ், பெயர் மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் பல சேவைகள் குறிப்பாக அசல் ஆவணங்களை தபால் மூலம் அனுப்ப முறையால் அதிக பணிச்சுமை மற்றும் தபால் துறையால் ஏற்படும் காலதாமதத்தால் தமிழக போக்குவரத்து துறை பணியாளர்களுக்கும் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.

புதிய சேவைகளை குறித்து நடைமுறை சிக்கல்களை போக்குவரத்து ஆணையரிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கை மேற்கொள்ளாததால் தமிழக முழுவதும் 3000 கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் என கூறப்படுகிறது.

பொதுமக்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து எளிதான முறையில் சேவைகள் வழங்க அரசு முன் வர வேண்டும் என விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போக்குவரத்து துறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பணியிடங்கள் தற்போது 80 சதவீதம் பணியிடங்கள் தொழில்நுட்பமற்ற தகுதி அதாவது பட்டப் படிப்பு பிரிவினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது

இதற்கான நீதிமன்ற உத்தரவுகளும் உள்ளது ஆனால் தற்பொழுது போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் 100% ஆர்டிஓ பணியிடங்களை தொழில்நுட்ப பிரிவினருக்கு வழங்க பரிந்துரை செய்து வருவதாகவும் போக்குவரத்து ஆணையரின் அமைச்சுப் பணியாளர்கள் விரோதப் போக்கினை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தொழில் நுட்பமற்ற பணியிடங்கள் மறைந்த டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது .

இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அனைத்து பணியிடங்களையும் ஒதுக்க போக்குவரத்து ஆணையர் நடவடிக்கை எடுத்து வருகிறார். போக்குவரத்து ஆணையர் இதுபோன்ற அமைச்சுப் பணியாளர்கள் விரோதப் போக்கினை வன்மையாக கண்டித்து சிறு விடுப்புப் போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் தமிழக முழுவதும் உள்ள இணை மற்றும் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *