ஆத்தூர் கள்ளக்குறிச்சி ராசிபுரம் சின்னசேலம் தர்மபுரி,திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்களின் பல்வேறு சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகிற இறைய மங்களம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட ரமண சாமி திருக்கோவில் திருத்தேர் விழா

வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 14ஆம் தேதி சித்திரை 1-ஆம் நாள் அன்று சிறப்பு பூந்தேரோட்டம் அதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருத்தேர்விழா நிகழ்ச்சி தொடங்கியது. கடந்த 21 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று மாலை 4:20 மணிக்கு தொடங்கியது. தேர் திருவிழாவை ஒட்டி டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதேபோல் தேரின் பின்னால் திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஆகியவை சென்றன. பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்களது குலதெய்வமான வெங்கட் ரமண சாமி என்னும் பெருமாளை தரிசிக்க கோவிலுக்கு வருகை தந்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மூதேவி ஸ்ரீதேவி உடனமர் வெங்கட் ரமண சாமி திருத்தே பார்த்தபடி முன்னால் ஆஞ்சநேயர் அமர்ந்த தேர் செல்ல பின்னால் பெருமாள் தேர் வடம் பிடிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *