பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20
பல்லடம் அருகே சீட் கவர் தைக்கும் கடையின் முன்பு பயங்கர தீ விபத்து…. பல மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்புத்துறையினர்
பல்லடத்தை அடுத்த கள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் இவர் பல்லடம் திருப்பூர் சாலை ராயர் பாளையம் அருகே சீட் கவர் தைக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்நிலையில் இன்று கடை விடுமுறையில் இருந்த நிலையில் அந்தக் கடையின் வெளியே பழுது நீக்க வைக்கப்பட்டிருந்த சோபா திடீரென தீப்பற்றி எரி தொடங்கியதாக கூறப்படுகிறது
இது குறித்து அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் மேலும் இந்த தீ விபத்தில் சுமார் 50,000 மதிப்பிலான சோபா பஞ்சு உள்ளிட்டவை சேதமடைந்தன மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பல்லடம் அருகே சீட் கவர் தைக்கும் கடையின் முன்பு தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20