மதுரையில் தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச. சார்பில்
மே தினவிழா…..
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் வழிகாட்டுதலில் தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச மாநில பொது செயலாளர் மணிமாறன் ஆலோசனைப்படி,
மதுரை மண்டல மின் கழக திட்ட தொமுச சார்பில், மின் வாரிய தலைமை அலுவலகம் முன்பு மதுரை மண்டல, திட்ட மின் கழக தொமுச செயலாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையிலும், திமுகழக தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.முத்தையா, மாநில மின் கழக தொ.மு.ச செயலாளர்கள் ரவீந்திரன், அழகுசுந்தரம் ஆகியோர்
முன்னிலையில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் மதுரை மாவட்ட தொ.மு.ச கவுன்சில் செயலாளர் கருணாநிதி தி.மு.க மற்றும் தொ.மு.ச பேரவை தொழிற்சங்க கொடிகளை ஏற்றி தொழிலாளர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மே தின வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்ட தொமுச கவுன்சில் நிர்வாகிகளான தலைவர் பிச்சை, பொருளாளர் இராமர், துணைச் செயலாளர் அருள்மொழி செல்வன், தொ.மு.ச பேரவை செயற்குழு உறுப்பினர் ராஜா ஆகியோருடன்,
சிறப்பு விருந்தினர் களாக தி.மு.க
மாநில தீர்மான குழு செயலாளர் அக்ரி.கணேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மதுரை – பெருநகர் திட்ட தலைவர் கணபதி பாண்டி, திட்டச் செயலாளர் அ.ரிச்சர்ட் பெரு நகர் திட்ட பொருளாளர் வசந்தராஜா, திட்ட துணை தலைவர் சரவணன் திட்ட துணை செயலாளர்கள் முருகேசன் பி.சண்முகசுந்தரம் ஜாஹிர்உசேன் கோட்ட தலைவர் ஷேக்பரித், கோட்டச் செயலாளர்கள் சத்தியமூர்த்தி வீரமணிகண்டன் எபினேசர் மதுரை-பெருநகர் திட்ட நிர்வாகிகள் கருணாநிதி, மணிவண்ணன் பழனி, பாண்டிச்செல்வம் ராஜன், ஏசுதாஸ், பன்னீர்செல்வம் சிவராசன்,மதுரை மாநகராட்சி தொ.மு.ச செயலாளர் தங்கவேலு பாண்டியராஜன் மற்றும் மதுரை மாவட்ட தொ.மு.ச கவுன்சில் இணைப்பு சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மே தின விழாவினை சிறப்பித்தனர்.