தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழ வகைகளை வழங்கினார்.


தூத்துக்குடி
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைத்திட வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி மே 5ஆம் தேதி நேற்று தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கிழக்கு பகுதி அதிமுக சார்பில் பகுதி செயலாளரும் முன்னாள் துணை மேயருமான பி.சேவியர் ஏற்பாட்டிலும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் வடக்கு பகுதி 5வது வார்டு சார்பில் லிங்கராஜ் ஏற்பாட்டிலும் அமைக்கப்பட்டிருந்த கோடை கால நீர், மோர் பந்தலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், ரோஸ்மில்க், நன்னாரி சர்பத், தர்பூசணி, வாழை, மா, பலா, ஆரஞ்சு, மாதுளை, திராட்சை போன்ற பல வகைகளும் வெள்ளரி, ஐஸ்கிரீம் போன்றவைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.


இந்நிகழ்வில் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், பகுதி கழக செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், வடக்கு பகுதி பொறுப்பாளர் செண்பக செல்வன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சரவணபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டைகர் சிவா, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன் தேவராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் சுரேஷ் பர்னன்டோ, கே.கே.பி.விஜயன், மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் அன்டோ, கிழக்கு பகுதி மீனவரணி செயலாளர் தீனா வசந்து பர்னாந்து, மதன்செல்வகுமார், வட்ட செயலாளர்கள் சுயம்பு, சொக்கலிங்கம், சங்கர், டேவிட் ஏசுவடியான், பரிபூரண ராஜா, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *