100-வதுஆண்டாக நடைபெற்ற அமுதுபடையல் நிகழ்ச்சி.. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்…..

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மணப்பறவை கிராமத்தில்

ஐந்து தலை நாகம் போல் காட்சியளிக்கும் ஆத்தி மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது..

சிறு தொண்ட நாயனார் திருவிளையாடலான பிள்ளைக்கறி சமைக்கும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் தொடர்ந்து அமுதுபடையில் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்..
அதன்படி இன்று நூறாவது ஆண்டாக ஸ்ரீ உத்தராபதிஸ்வரருக்கு அமுது படையில் நடைபெற்றது..
இந்த நிகழ்வில் ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் சுவாமிக்கும், உற்சவருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று புஷ்பங்களால் அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது.. நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக் கடனை செலுத்தினர்.

முன்னதாக, மணப்பறவை மற்றும் ஏரூர்ந்தவாடி கிராம பகுதிகள் முழுவதும் உள்ள வீடுகளுக்கு ஊர்வலமாக சென்ற உற்சவமூர்த்திக்கு ஊர் மக்கள் அர்ச்சனைகள் செய்து.. அரிசியும் காய்கறிகளையும் தானமாக வழங்கினர்.
அவைகளை எடுத்து வந்து ஆலயத்தில் உணவு தயாரித்து ஸ்ரீ உத்தரபதீஸ்வரர் சாமிக்கு அமுதபடையல் செய்விக்கப்பட்டது…

தொடர்ந்து.. சிவனடியார் களை அமர வைத்து அன்னம் பாளிக்க க்கப்பட்டது.. 

அமுது படையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவனடியார்களின் கைகளினால் உணவு வாங்கி….திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டிக் கொண்டு அந்த உணவை உண்டபின் பிரார்த்தனை செய்து வேண்டுதல் செய்தால்..
நிச்சயமாக நிறைவேறும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

இன்று 100-வது ஆண்டாக நடைபெறும் அமுதுபடையல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரையில் அமர்ந்து அன்ன பிரசாதம் உண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம வாசிகள் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *