செங்கம் அருகே கட்டிடத் தொழிலாளி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலால் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ….

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கன்னகுருக்கை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கங்காதுரை மற்றும் மாசிலாமணி
ஆகிய இருவரும் மூன்று தினங்களுக்கு முன்னர் கட்டிட வேலை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மற்றும் பலராமன் ஆகிய இருவரும் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த நெல்மணிகளை திருவண்ணாமலை – பெங்களூரு
தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்தில் கொட்டி உளர்த்தி அதன் மீது வாகனம் ஏதும் ஏற்றாமல் இருப்பதற்காக சாலையில்
கருங்கல்லை வைத்ததாக கூறப்படுகிறது.

கங்காதுரை வீடு திரும்பி கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் சாலையில் இருந்த கருங்கல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கங்காதுரை என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பின்னர் பாய்ச்சல் காவல் நிலையத்தில் இரவு நேரத்தில் சாலையில்
நெல் உலர்த்தி கருங்கல்லை அடுக்கி வைத்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் திருவண்ணாமலை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிப்புக்கு உள்ளானது

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையிலான போலீசார் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்வதாக கூறிய பின்னர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *