செய்தியாளர் உதயசூரியன் அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் பகுதியில் பலத்த காற்று இடி மின்னலுடன் மழை
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது கடந்த சில நாட்களாக கோடை வெயில் 100 டிகிரி தாண்டி கொளுத்தி எடுத்த நிலையில் நேற்றும் இன்றும் பலத்த காற்று வீசி மரங்கள் வேரோடு சாய்ந்து இடி மின்னலுடன் மழை பெய்தது அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அ.கோவில்பட்டி, வைகாசிபட்டி, கோணப்பட்டி, எரம்பட்டி, உள்ளிட்ட கிராமம் பகுதிகளில் விட்டு வைக்காமல் மழை பெய்தது மழை பெய்த மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் அடுத்த கணமே தங்கள் பயிரிட்டு இருந்த முத்துச்சோளம் மற்றும் வாழைமரம், வேரோடு சாய்ந்து விட்டதை நேரில் பார்த்தவுடன் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர்
மின்சார மோட்டார் மூலமாக வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி மிகுந்த கஷ்டத்திற்கும் மத்தியில் முத்துச்சோளம் மற்றும் வாழைமரங்களை விவசாயம் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர் இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழையின் காரணமாக இவை அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்தன விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்
விவசாயிகளின் வேதனையை கருத்தில் கொண்டு தமிழக அரசும் அரசு அதிகாரிகளும் வாழ்வாதாரம் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மூலமாக உதைவிட வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.