திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே உள்ள சேடபட்டியில் உள்ளது சேரன் குளோபல் மெட்ரிக்குலேசன் பள்ளி சாய் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக நடத்தப்படும் இப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
நேற்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய மாணவ மாணவியர்கள் அனைவரும் 100சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து இப்பள்ளி 7ஆண்டுகளாக 100சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
தேர்வு எழுதிய மாணவர்களில் முதலிடம் பிடித்த மாணவர் கே.தீபக் 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றார் தமிழில் 89ம் மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 97ம், கணிதத்தில் 95ம், அறிவியலில் 97ம் சமூக அறிவியலில் 98 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். பள்ளியில் 2ம் இடம் பிடித்த மாணவி எஸ்.தருணிகா 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
தமிழில் 96ம் மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 92ம், கணிதத்தில் 98ம், அறிவியலில் 93ம் சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இதுபோல பள்ளியில் 3ம் இடத்தை பிடித்த மாணவர் டி.முகமது இஸ்காக் 500க்கு 466 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
தமிழில் 91ம் மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 91ம், கணிதத்தில் 97ம், அறிவியலில் 94ம் சமூக அறிவியலில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். பள்ளியில் 4ம் இடம் பிடித்த மாணவர் ஆர்.மோனீஷ் 500க்கு 463 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தமிழில் 95ம் மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 96ம், கணிதத்தில் 98ம், அறிவியலில் 89ம் சமூக அறிவியலில் 85 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். பள்ளி மாணவர்களில் 450 மதிப்பெண்களுக்கு மேல்; 6 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல்; 18 பேரும், பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளியில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவ மாணவியருக்கு பள்ளி தாளாளர் என்.திலகம் சிவக்குமார் சால்வை மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இதுபோல பள்ளி முதல்வர் ஏ.மகாலெட்சுமி, துணை முதல்வர் என்.சரண்யா, சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேலாளர் ஓ.பி.பாரதிராஜா மற்றும் ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.