திருப்பூர் செய்தியாளர் திருக்குமார் 9655664441
திருப்பூர் பூலுவபட்டி அம்மன் நகர் கருப்பாராயன் கோவில் முதல் வீதி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது இதில் தார் சாலை அளவு குறைவாகவும் போதுமான எம்சாண்ட்மணல், ஜல்லி, தார்.பயன்படுத்தவில்லை, எனவும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாக்கடை கால்வாய் ஒட்டி தார் சாலையை அமைக்காமல் குறுகியளவு அமைப்பதாக பொதுமக்கள் மிகவும் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளரை சந்திக்கப் போவதாக கூறுகின்றனர் அப்பகுதி பொது மக்கள், ரவி,செந்தில்,
வீரசாமி, பிரகாஷ், ப்பாத்தி,பழனியம்மாள்,விதயா,
தனலட்சுமி,காயத்திரி,சரஸ்வதி,பூங்கொடி,
மலர், அமுதா. ஆகியோர் கலந்து கொண்டனர்.