தூத்துக்குடி மாநகரில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருகிறது அதன்மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதை அறிந்த போக்குவரத்துக் காவல் துறை மாநகரில் பல்வேறு இடங்களில் சக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்
அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமண்ய பாலசந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி போக்குவரத்து ஆய்வாளர் பேச்சி முத்து தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகபாலன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் சுயம்புலிங்கம் மற்றும் கணேசன் ஆகியோர் கொண்ட போக்குவரத்து காவல்துறையினர் மாநகரில் பல இடங்களில் நின்று இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களை நிறுத்தி கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் அதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் நன்மைகள் அதனால் ஏற்படும் தீமைகளை போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை கூறி கட்டாயம் இருசக்கர வாகன ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று கூறி வருகின்றனர்
மேலும் ஓட்டுநர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டு வருகிறது இது பற்றி போக்குவரத்து காவல்துறையினரிடம் கேட்ட பொழுது தூத்துக்குடி மாநகரில் இருசக்கர வாகனத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பாக இருக்க தங்களுடைய உயிரை பாதுகாத்துக் கொள்ள இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது
ஆகையால் பொதுமக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சி முத்து கூறி வருகிறார் ஆகையால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி வருவதால் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் மேலும் வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்துக் காவல் துறை அறிவுறுத்தி வருகிறது
மேலும் பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சைலன்சர் பொருத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது அதையும் மீறி இருசக்கர வாகனத்தில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்தப்பட்டு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை கூறி வருகிறது