நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் போதை மாத்திரை, ஊசி உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த ஏழு பேரை கைது செய்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிகளில் அதிக அளவு போதை பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக புகார் எழுந்து வந்த நிலையில், நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பரமத்திவேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா மற்றும் பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் ரங்கசாமி ஆகிறது தலைமையில் மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மாலை பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் காவிரி கரையோரம் உள்ள ஆலமரம் பகுதியில் சில இளைஞர்கள் போதையில் சுற்றி திரிவதாகவும் அவர்களுக்குள் வாக்குவாதம் நடப்பதாகவும் போலீசாரக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.