தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
ஈழப்போரில் மாண்டவர்களுக்கு இடதுசாரி பொது மேடை சார்பில் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில், ஈழப்போரில் உயிரிழந்தவர்களுக்கு இடதுசாரி பொது மேடை சார்பில் உலக தமிழர் பேரமைப்பின் துணைத்தலைவர் அய்யனாபுரம் முருகேசன் தலைமையில்
வீரவணக்கம் செலுத்திய பின்னர்.
கடந்த 2009ம் ஆண்டு ஈழத்தில் நடந்த தமிழீழப் போரில் ஒன்றேமுக்கால் லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈழத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள். பெண்கள். சிறுவர். சிறுமிகள் காணாமல் போயினர். ஈழத்தில் சிங்கள குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதோடுமுள்வேலி முகாம்களும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்திய அரசு இலங்கை க்கு அளித்த நிவாரணங்கள் எதுவும் ஈழத்தமிழர்களுக்கு சென்றடையவில்லை.எனவே ஐ. நா. சபை தலையிட்டு ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் பெற்றுத் தரவும். தழிழர்பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்திட வும். சர்வதேச நாடுகள் போர்குறாறவாளியான இலங்கை அரசை தண்டிக்க வேண்டுமென அஞ்சலி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நினைவஞ்சலி கூட்டத்திற்கு.
இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சேவையாகும். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன். சமூக ஆர்வலர்கள் கஸ்தூரி.முருகவேல்.சிவா.பாண்டி.பாலகிருஷ்ணன்.பழனிமாணிக்கம்.விஜய்.சத்யா.கோதண்டராமன் உள்ளிட்ட திரளான னோர்கள் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்