கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக, இரண்டாம் கட்டமாக 2023-2024-ஆம் ஆண்டு 2ம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு கல்லூரிக் கனவு (Career Guidance) தொடர்பான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் (18.05.2024) அன்று துவக்கி வைத்து உரையாற்றினார்.
உடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், எம்எம்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.குமரேசன் மற்றும் மாணவ மாணவியர்கள் உள்ளனர்.