தென்காசி, மே -19
தென்காசியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் பணி நிறைவு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தென்காசி இ.சி. ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உலகத்தில் உள்ள அரங்கத்தில் வைத்த நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா தலைமை தாங்கினார்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் சங்கர் அனைவரை யும் வரவேற்று பேசினார்.
தென்காசி மாவட்ட துணை தலைவர் சுந்தர் சிங், தலைமையிட செயலாளர் சுந்தர குமார், மாவட்டம் மகளிர் அணி செயலாளர் அன்னக்கிளி, மாவட்ட அமைப்புச் செயலாளர் தேவதாசன் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் தங்கமணி, மாநில பொருளாளர் அனந்தராமன், மாநிலத் துணைத் தலைவர் இளவரசு, மாவட்ட துணை தலைவர் ராமசாமி, மாவட்ட செயலாளர் தமிழ் வாணி ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்கள்.
மாவட்ட இணை செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் ராஜகோபால், புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷாஜகான், சாம சாம்பவர் வடகரை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.மாவட்ட பிரச்சாரச் செயலர் பாக்கியநாதன் தொகுத்து வழங்கினார்.
பணி நிறைவு பெறும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வினை தீர்த்த நாடார் பட்டி சந்திரசேகர், நெல் கட்டும் செவல் சுப்பிரமணியத்துரை, முள்ளிகுளம் மீனாம்பிகை, வாசுதேவநல்லூர் ஜெயசீலன், புலியரை டேவிட் ராஜசிங், கடையநல்லூர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ், பூலாங்குளம் ஜூலியானா டெய்சி மேரி, சிவகுருநாதபுரம் கனகராஜ், கரிவலம்வந்தநல்லூர் குமரேசன், தென்மலை கருப்பசாமி ஆகியோருக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநில தலைவர் தங்கமணி பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு விரைவான பண சலுகைகள் கிடைக்க பெற உறுதியாக ஒத்துழைப்பு தருவோம் என்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணி பாதுகாப்பிற்கு அவர்களின் தேவைகளை உணர்ந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும்தலைமை ஆசிரியர்களின் தேவைகளை உடனுக்குடன் தலைமை குழுக்களின் மூலமாக உடனுக்குடன் அரசுக்கு எடுத்துச் செல்வோம் என்று உறுதி கூறினார். முடிவில் தனியார் பள்ளி செயலாளர் அமிர்தசிபியா அனைவருக்கும் நன்றி கூறினார்.