காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில், புற்று நோயியல் கல்வி கருத்தரங்கின் ஒன்பதாம் நிகழ்வாக புற்று நோயர்களுக்கான ஊட்டச்சத்து என்ற தலைப்பில் கருத்தரங்கமானது இயக்குனர் மரு.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் திருப்பதி ஶ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்வி நிறுவனத்தின் புற்று நோயியல் துறை தலைவர் மரு. நரேந்திரா ஹுளிக்கள் புற்று நோயர்களுக்கான ஊட்டச்சத்துகள் குறித்து எடுத்துரைத்து உரையாற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஹரிஹரன் , அண்ணா புற்று நோய் மருத்துவமனையில் சேவை ஆற்றி ஓய்வு பெற்ற மரு. சந்திர சேகர், ஊட்டசத்து நிபுணர் முனைவர். மீனாக்ஷி பஜாஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் புற்று நோயர்கள் சந்திக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகள் களைவது குறித்த மருத்துவ வல்லுனர்கள் குழும கலந்துரையாடலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான மரு. T.D.பாலமுருகன் நடத்தினார்.
நிறைவாக உள்ளுறை மருத்துவ அதிகாரி மரு. சிவகாமி நன்றியுரை ஆற்றினார்.
இந்த கருத்தரங்கில் 100 பேர் நேரடியாகவும் ,50 பேர் காணொளி வாயிலாகவும் பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்க