தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா முழுமைக்கும் முருங்கை சாகுபடி அதிக அளவு உள்ளது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முருங்கை சாகுபடி உள்ளதால் வரத்து அதிகமாக உள்ள நேரங்களில் பல ஆயிரம் டன் முருங்கை காய்கள் அண்டை மாநிலம் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது .

வரத்து அதிகமான உள்ள நேரங்களில் விலை குறைந்தும், வரத்து இல்லாத நேரங்களில் விலை அதிகரித்தும் விவசாயிகளுக்கு எப்போதும் தர்ம சங்கடமான சூழ்நிலையை முருங்கை சாகுபடி உண்டாக்கி வருகிறது. இந்நிலையில் எல்லா காலத்திற்கும் ஏற்ற வகையில் முருங்கையில் எவ்வாறு மதிப்பு கூட்டி தயார்படுத்தலாம் என்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் பல்வேறு நிலைகளில் விளக்கம் அளித்து வருகின்றனர்.

 இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே  உள்ள கோத்தலூத்து கிராமத்தில், மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி ஜெய ரஞ்சனி, ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ்,முருங்கையில் மதிப்புக் கூட்டல் குறித்து எடுத்துரைத்தார்.

முருங்கயினை மதிப்புக்கூட்டி விற்பது அதாவது, முருங்கை இலைகளை பொடியாக்குதல், முருங்கை பூவை மாத்திரை வடிவில் மாற்றி விற்பது இவ்வாறு செய்வதன் மூலம் அதிக விலை இல்லாத நேரங்களில் லாபம் கிடைக்கும் என்று எடுத்துரைத்தார். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *