மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, நல்லானூர், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசரிப்பு விழா மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார்.
குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த் முன்னிலை வகித்தார்.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் , ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சி.பரஞ்சோதி, தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வில் மாணவி சி.ரேணுகாதேவி வரவேற்புரை வழங்கினார்.
மாணவர்களிடத்தில் தாளாளர் கோவிந்த் பேசுகையில் ” போட்டி நிறைந்த காலத்தில் மாணவர்கள் நல்ல தொழில்நுட்ப அறிவினை பெற வேண்டும். மாணவர்கள் தங்களின் பெற்றோருக்கு நற்பெயரை எடுத்து தரவேண்டும். தொழிற் நிறுவனங்களில் நல்ல அனுபவத்தை பெற்று சிறந்து விளங்க வேண்டும் என்றார் “
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 200 மாணவர்களுக்கு பணி ஆணையை தாளாளர் வழங்கினர்.
மேலும் தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற நா.நாகராஜ் அவர்களுக்கு பாராட்டு விழாவில் மொழிக் காவலர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.