சீர்காழி ரயில் நிலையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு கொலையா தற்கொலையா என சீர்காழி போலீசார் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையம் அருகே புதிய ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அப்பகுதியில் உள்ள மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.இது குறித்து அவ்வழியே ரயிலில் சென்ற பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சீர்காழி போலீசார் அப்பகுதிக்குச் சென்று பார்த்தனர்.

அப்போது 30 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்குவதை அறிந்து அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். போலிசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பதும் அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.மேலும் அவர் இங்கு ஏன் வந்தார் தற்கொலைதான் செய்து கொண்டாரா? வேறு ஏதும் காரணமா? என தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *