தலைவாசல் வட்டாரத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தலைவாசல் வட்டார வள மையம்
மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் தலைமையில் தலைவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 15 வயதிற்கும் மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி மே 2 முதல் மே 24 வரை நடைபெற்று வருகிறது
.இந்தப் பணியில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,
உதவி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர் பொறுப்பு ,ஆசிரியர் பயிற்றுநர்கள் எஸ் எம் சி தலைவர்கள், உறுப்பினர்கள், ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சேகரிக்கப்பட்ட விவரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் எமிஸ் செயலில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.