பழனியில் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், பஞ்சாயத்து ராஜ் என பல துறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்திய முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு நகர காங்கிரஸ் கமிட்டி, மேற்கு மண்டலம் சார்பாக பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அனிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் மேற்கு மண்டல தலைவர் வீரமணி தலைமையிலும் முத்து விஜயன் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றன.
மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் முருகானந்தம் மாவட்டச் செயலாளர் மகாலட்சுமி மாசிலாமணி திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் நேரு, முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் கலைப்பிரிவு குணசேகரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி, ஆயக்குடி சரவணன்,பெரியதுரை ஆட்டோ கணேசன், சிறுபான்மை பிரிவு ஹக்கீம், மண்டல துணைத் தலைவர் ஆட்டோ பிச்சைமுத்து, பழனி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பாண்டி, குழந்தைவேலு, அடிவாரம் முத்து, மானூர் செல்லம், டான்சி கதிரேசன் மற்றும் பழனி நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.