அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தில் அமைந்திருக்கும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருச்சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் அலங்காநல்லூர் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக மண்டல தலைவர் தங்கதுரை கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் கணேஷ், ஒன்றிய துணைத் தலைவர்கள் கண்ணன், மலைச்சாமி, மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளர் முனிஸ்வரி, மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் சுப்பையா, அரசு தொடர்பு பிரிவு ஒன்றிய தலைவர் சாமி கஜேந்திரன், பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் சந்தானம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.