அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
அ.கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்றது நான்கு நாட்கள் நடைபெற்ற அந்த திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக கடந்த 14.5.2024 செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து 22.05.24 புதன்கிழமை அதிகாலை கணபதி ஹோமம் பூசாரி அருள் இறங்கி அழைத்து வருதல் சாமி வீட்டில் இருந்து அம்மன் பெட்டி கோவிலுக்கு எடுத்து வருதல் அதனை தொடர்ந்து அன்று மாலை சக்தி கரகம் மற்றும் முளைப்பாரி எடுத்தல் நேர்த்திக்கடனாக நிகழ்ச்சியாக மாவிளக்கு அடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை தீபாதாரணையும் சக்தி கிடாய் பலியிடுதல் அன்று அதிகாலை இரண்டு மணிக்கு அளவில் கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை படையலும் நடைபெற்றது.
அடுத்த நாள் வியாழக்கிழமை ஸ்ரீ பத்திரகாளியம்மன் கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பக்தர்கள் பால்குடம் அக்கினி சட்டி எடுத்தல் பொங்கல் வைத்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சக்தி கரகம் முளைப்பாரி ஊர்வலமும் பல்லயம் பிரித்தல் அம்மன் பெட்டி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த திருவிழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர் கோவிலின் சார்பாக அவர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பதினென் கிராம நாடார் குல நாட்டாமை பூசாரி வகையறா
அ.கோவில்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்..