திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர் கைது
திருப்பூர் வெள்ளியங்காடு வாழத்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார்.ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் வெள்ளியங்காடு பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில் ஞானசேகரன் வயது 28 வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 31 இவர் திருப்பூர் இவர்கள் திருப்பூரில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் கூலி வேலை செய்து கொண்டு திருப்பூர் வாழ தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது
ஞானசேகரன் கார்த்திக் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்