மாறாந்தை 4 வயது சிறுமி (7 ) உலக சாதனை விருதுகள் பெற்று அசத்தல்-ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பரிசு வழங்கி பாராட்டு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தை கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜா- சுபா தம்பதியின் மகள் அபர்ணா (வயது 4). இந்த சிறுமி அபர்ணா 2 வயது முதல் தன்னுடைய தனித்திறமைகளை காட்டத் தொடங்கி
முதல் சாதனையாக கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் – 30 விலங்குகள் -30 பூச்சிகள் -40 பறவைகளின் பெயர்களை கூறியும்,
2024 ஆண்டில் மே மாதம் 1 நிமிடத்தில் அதிகபட்ச எதிர் சொற்களை கூறி இந்தியா ரெக்காட் சான்றிதழ்களை பெற்றுள்ளார்.
இச்சிறுமி சூரிய குடும்பத்தின் கிரகங்கள், விலங்குகள். எதிர்வார்த்தைகள். காய்கறி வகைகள். இந்திய நதிகள், காட்டு விலங்குள் உள்பட 40 விதமான தலைப்புகளில் பேசி கடந்த மார்ச் 2022ம் ஆண்டு கலாம் உலக சாதனை விருது பெற்றுள்ளார்.
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்களையும் 30 நொடிகளில் கூறியும், ஆசிய நாடுகளின் தலைநகரங்களின் பெயரை 44 நொடிகளிலும் கூறியும், வார்த்தைகளுடன் கூடிய எழுத்துக்களை 41 நொடிகளில் கூறியும். ஜூன் 2022ம் ஆண்டு, மிக குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நினைவாற்றல் செயல்பாடுகளை படிக்கும் இளைய குழந்தை என்ற டிரைம்ப் உலக சாதனை விருதும் பெற்றுள்ளார்.
விருது பெற்ற சிறுமி அபர்ணாவை நேரில் சந்தித்து ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பரிசு வழங்கி பாராட்டினர்.