எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் பிரதான சாலையில் இயங்கிவரும் 2ஜவுளி கடைகளில் திருட்டு போன நிலையில் திருட்டில் ஈடுப்பட்ட நபரை 24மணிநேரத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவர் கலிவரதன். இவர் பிடாரி தெற்கு தெருவில் உள்ள வஸ்திரா ஜவுளி கடை மற்றும் தேர் மேல வீதியில் உள்ள எவர்கிரீன் ஜவுளி கடை ஆகிய 2 கடைகள் வைத்து தனது சகோதரருடன் இணைந்து நடத்திவருகிறார்.
இதனிடையே செவ்வாய்கிழமை இரவு பிடாரி தெற்கு தெருவில் வழக்கம்போல் கடையை பூட்டி சென்ற நிலையில், புதன்கிழமை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடை கல்லாவில் வைத்திருந்த பணம் திருட்டுபோனது தெரியவந்தது. இதேபோல் தேர் மேலவீதியில் உள்ள அவரது மற்றொரு கடையிலும் பணம் திருட்டுபோயிருந்தது. இது குறித்து ஜவுளி கடையின் மேற்பார்வையாளர் கலிவரதன் சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் காவல்ஆய்வாளர் சிவக்குமார், தனிப்படை போலீஸôர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீஸôர் வழக்குபதிவு செய்து சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த முகமது பாகத் (25) என்பது தெரியவந்தது.
திருட்டில் ஈடுப்பட்ட நபர் திருட்டு நடந்த கடை ஒன்றில் பணியாற்றி சில மாதங்களுக்கு முன்னர் பணியிலிருந்து நின்றது தெரியவந்தது. முகமது பாகத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.