பெரம்பலூர் மாவட்டம்
2023- ஆம் ஆண்டிற்க்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் . மாவட்ட ஆட்சித்தலைவர் க. கற்பகம் தகவல்.

மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், மாநிலங்களில் நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் பாராட்டத்தக்க வகையில் சிறப்பான சாதனை படைத்தவர்களை பாராட்டும் வகையில் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கி கௌரவித்து வருகின்றது.

அதன்படி 2023ஆம் ஆண்டிற்கு இவ்விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது பெற விண்ணபிக்க தேவையான விபரங்கள் https://awards.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ளது.

தகுதியுடையவர்கள் தேவையான விபரங்களை 27.05.2024-க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து விண்ணப்பித்த விபரத்தின் நகலினை பெரம்பலுார் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு வழங்கிட வேண்டும்.
எனவே, பெரம்பலுார் மாவட்டத்தைச்சார்ந்த இவ்விருதுவிற்கு விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் உரிய தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *