பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்விற்கு வருகை புரியாத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ‘தொடர்ந்து கற்போம்’ என்ற முன்னோடி திட்டமானது தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி அளவிலேயே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் துணை தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது மாணவர்களுக்கு குறைந்தபட்ச கற்றல் கையேடு மற்றும் வினாத்தாள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் வருகை மற்றும் வாராந்திர தேர்வு மதிப்பீட்டு முன்னேற்ற அறிக்கையை கல்வி மேலாண்மை தகவல் மையம் மூலம் பெற்று முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பூங்குழலி அவர்களின் பயிற்சி வகுப்பினை வட்டார வள மைய மேற்பார்வையாளர் த. அமுதா அவர்கள் பார்வையிட்டார்.