தாராபுரம் செய்தியாளர் பிரபு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள தேர்பட்டி, பகுதியைச் சேர்ந்தவர் மணி, இவரது மகன் சிவகுமார் 38, இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மற்றும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த விதவைப் பெண் வயது 35 ,இவருடன் தகாத உறவில் கட்டிட மேஸ்திரி சிவக்குமார் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் விதவைப் பெண்ணின் மகளான கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17,வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் சில்மிஷம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்படவே சிறுமியை, சிறுமியின்(விதவைப் பெண்) தாயார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர் அதன் பிறகு கணவர் எங்கே எனக் கேட்டபோது சிறுமி அதே தேர்பட்டி பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த ஒருவரை தனது கணவர் என தெரிவித்துள்ளார்.
சந்தேகம் அடைந்த அரசு மருத்துவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் மருத்துவமனைக்கு நேரில் சென்ற ஆய்வாளர் செல்லம் விசாரணையை தொடங்கினார் அப்போது. தனது அம்மாவின் கள்ளக்காதலனான சிவகுமார் என்பவர் தன்னை ஏமாற்றி பாலியல் தொந்தரவு செய்து விட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார் இதனை அடுத்து கட்டிட மேஸ்திரி சிவகுமார் மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில் கட்டிட மேஸ்திரி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் அதன் மூலம் சிறுமி கற்பம் அடைந்ததும் தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் சிவகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.