பாலக்கோடு பிடி.ஓ. அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரணஹள்ளி ஊராட்சி துப்பாக்கிகாரன்கொட்டாய் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஒகேனக்கல் குடிநீர் கேட்வாழ்வில் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் கேட்வால்வை முழுமையாக அதிகாரிகள் மூடியதால் குடிக்க தண்ணீர் இன்றி பெரும் சிரமம் அடைந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே குடிநீர் கேட்டு கிராமமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் காலி குடங்களுடன் பிடி.ஓ.அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது ஒகேனக்கல் குடிநீர் கடைகோடி கிராமங்களுக்கும் முழுமையாக ஒகேனக்கல் குடிநீர் சென்றடைவது பெரும் சிரமமாக உள்ளதாகவும் இடைப்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாகவும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி குழாய் அமைத்தும், கேட் வால்வு பகுதிகளில் குடிநீர் பிடித்து வருவதால் முழுமையாக குடிநீர் சென்றடைவதில்லை எனவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.