வலங்கைமான் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதர் சன்னதி தெருவில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, காலை ஆறு மணிக்கு கருட வாகனத்தில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் வீதி உலா காட்சியும், மாலை ஆறு மணிக்கு திருக்கல்யாண வைபோகமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பஞ்சாரத்ர ஆகம அலங்கார சக்கரவர்த்தி குடந்தை ஸ்ரீ பக்திசாரா பட்டாச்சார், ஆலய அர்ச்சகர் எஸ். வேம்பு பட்டாச்சார் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய தக்கார் ஆ. ரமேஷ், ஆய்வாளர் க. மும்மூர்த்தி மற்றும் வலங்கைமான் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.