பாலமேடு,மே.26
மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள தனியார் திருமண மஹாலில் தானம் அறக்கட்டளையின் பாலமேடு வட்டார களஞ்சியம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் முருகேசன், தானம் அறக்கட்டளையின் கிராமப்புற மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா, மற்றும் பாலமேடு வட்டார களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் வள்ளி ஆகியோர் செய்திருந்தனர்.
முகாமிற்கான பணிகளை பாலமேடு வட்டார களஞ்சிய தலைவிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்தனர். இந்த முகாமில் சுமார் 278க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அதில் 90க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். 35 பேர் கண்ணாடி பெற்றுள்ளனர்.