தென்காசி, மே – 27
தென்காசி மாவட்டம், தென்காசி வட்டாரத்தில் 2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமம் தேர்வு செய்ய பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் பகுதியில் பல்வேறு வேளாண்மை துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக திருச்சிற்றம்பலம் கிராமத்தில் முதறாகட்டமாக மண்மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் தென்காசி வட்டார உதவி வேளாண்மை அலுவலர் பரமசிவன் மண்மாதிரி முகாமை துவக்கி வைத்ததோடு
தென்காசி வட்டாரத்தில் 2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திருச்சிற்றம்பலம் கிராமம் தேர்வு செய்ய பட்டுள்ளது பற்றியும் அதன் மூலம் இந்த பகுதியில் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு வேளாண் வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார்.
அதனைத் தொடர்ந்து மண் பரிசோதனை செய்வதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகளாகிய ஆசிகா, அனாமிகா, ஹீரா, ஜக்குலின், ஜெயஸ்ரீ, கல்பனா, பேச்சியம்மாள், ரஞ்சனிதேவி ஆகியோர் மண்மாதிரி எவ்வாறு எடுப்பது என்பதை பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும் தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் செய்து வரும் கிராமப்புற வேளாண் களப் பயிற்சி அனுபவம் பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள்.
இந்த முகாமில் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி ஆசிகா, அனைவருக்கும் நன்றி கூறினார்.