எஸ்.செல்வகுமார் சீர்காழி
சீர்காழி அருகே இறந்தவரின் உடலை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதியில் அடக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சின்ன கொட்டாயமேடு முடவன் ஆறு கரை ஓரம் தண்டவன்குளம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி யசோதா கடந்த 24 ம்தேதி உயிரிழந்துள்ளார்.
அவரின் உடலை அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைக்காமல்.ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்ன கொட்டாயமேடு முடவன் ஆறு கரை அருகே உடலை புதைத்துள்ளனர்.யசோதா உடலை உறவினர்கள் அடக்கம் செய்த போது சின்ன கொட்டாயமேடு பகுதியை சேர்ந்த கணேசன் இது பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள இடம் இதில் உடலை அடக்கம் செய்ய கூடாது என தடுத்துள்ளார்.
அவரை தாக்கி அவசரமாக குறைந்த ஆழத்தில் உடலை புதைத்து சென்றதாக கூறப்படுகிறது.
தற்போது சின்ன கொட்டாய் மேடு சித்தி விநாயகபுரம் நவநீத கண்ணபுரம் வடக்கு தெரு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உடல் அடக்கம் செய்த இடத்தில் ஒன்று கூடி உடல் அடக்கம் செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து உடலை வேறு இடத்தில் புதைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.