தென்காசி ஜூன் 5
தென்காசி மாவட்டம் வல்லத்தில் கலைஞரின் 101 வது பிறந்த தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு வல்லம் ஜமீன் பஞ்சாயத்து செயலாளரும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமான ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார்
ஒன்றிய பிரதிநிதி அகமது ரெசவுமைதீன் வல்லம் கிளைச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கழகத்தின் இரு வண்ணக் கொடியை தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி ஏற்றி வைத்து கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் சுலைமான் முத்தையாச்சாமி கருப்பசாமி ஜேம்ஸ் சுப்பிரமணி துரையப்பா திவான் மைதீன் சாகுல் ஹமீது மசூத் அலி மைதீன் ஹனிபா சாகுல் ஹமீது மாரி அஜ்மீர் நாகூர் மீரான் இப்ராஹிம் ராஜா பலவேசம் பாதுஷா மைதீன் பிச்சை ரபீக் ஆஷிக் காதர் ஒலி தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்