மக்கள் செல்வாக்கை இழந்த ரங்கசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்- புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட்டராமன் வலியுறுத்தல் :-
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற கூற்றின் படி அதிகாரம் இல்லாத முதல்வர் ரங்கசாமிக்கு தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏறறு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி சம்பந்தமாக ரங்கசாமி எடுத்த முடிவு தவறு என்பதை சுட்டிக்காட்டி இந்த மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனர். புதுவையில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ரங்கசாமி ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி சம்பந்தமாக எடுத்த தவறான முடிவுகள் தான் இன்று மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தும் மக்கள் மத்தியில் அவரால் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முடியவில்லை.
இதற்கு என்ன காரணம் என்று ரங்கசாமிக்கே வெளிச்சம். மக்கள் நலனை மறந்து செயல்பட்டதன் விளைவுதான் மக்களவை தேர்தல் முடிவு. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் ரேஷன் கடையை கூட திறக்க மூன்றாண்டுகளாக முயற்சி செய்யவில்லை . இந்தியாவில் ரேஷன் கடை இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி தான் என்று தெரிந்தும் அதை செய்ய அதிகாரம் இல்லை என்று கூறும் ஒரு முதல்வரை மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்.
அதே போல் குப்பை வரி நீக்கப்படும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுவை சட்டமன்ற முதல் பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவித்தும் அதனை இதுவரை நடைமுறை படுத்தவில்லை என்றால் மக்கள் எப்படி ரங்கசாமியை ஏற்பார்கள் .
இந்தியாவிலேயே குப்பைக்கு வரி போட்ட ஒரே மாநிலம் புதுச்சேரிதான் என்று மக்கள் உணர்ந்து உள்ளனர். தனது ஆட்சியில் அதிகப்படியான மதுபான தொழிற்சாலைகள் , ரெஸ்டோ பார்களை திறந்தும் புதுவையில் கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தி மக்களை மயக்கத்தில் வைத்திருந்தார்.
நாம் தான் புதுவை மக்களின் முதல்வர் என்றும் கூட பாராமல் தெரு தெருவாக சென்று ஆட்டோ பிரச்சாரம் செய்வது போல் மக்களிடம் சென்று ஓட்டு கேட்டு விரைவில் ரேஷன் கடையை திறப்போம் என்றும் , மாநில அந்தஸ்து இல்லை என்று மத்திய அரசு கை விரித்தும் கூட மக்களிடத்தில் மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்று பொய் வாக்குறுதிகளையும் அளித்தார்.
அதனை ஏற்காத மக்கள் ரங்கசாமியை வழிமறித்து கேள்வியும் கேட்டனர். ஆனால் மக்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதனால்தான் மக்கள் சரியான தீர்ப்பை அளித்திருக்கின்றனர்.
அவரது சொந்த தொகுதியிலும் , NR காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் கூட மக்கள் ரங்கசாமிக்கு வாக்கு அளிக்க தயாராக இல்லை . இது மக்கள் மத்தியில் ரங்கசாமி தனது செல்வாக்கை இழந்து விட்டார் என்பதையே காட்டுகிறது.
ஆகவே மக்கள் நலனை மறந்த முதல்வர் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து தார்மீக பொறுப்பேற்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .
இவண்.
R L . வெங்கட்டராமன்
சேர்மன்,
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம்,
புதுச்சேரி.