அலங்காநல்லூர்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றதையடுத்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுக்கடையில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், கட்சியின் கொடியேற்றி கொண்டாடினர்.
இதற்கு மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன் தலைமை தாங்கினார். தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன், மாநில துணைச் செயலாளர் அழகுமலை, ஆட்டோ சங்கத் தலைவர் திருமா வாசு, செயலாளர் பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க பொருளாளர் பாண்டி, ஒருங்கிணைப்பு குழு தலைவர் கடல் கேசவன், நிர்வாகிகள் ராஜாராம், பரமசிவம், தமிழ்குமரன், மற்றும் ஆட்டோ சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தொல்காப்பியர் ஆட்டோ நிலைய ஒருங்கிணைப்பு குழுவினர் செய்திருந்தனர்.