ஆண்டிபட்டி பேரூராட்சி சார்பில் 30 லட்சம் ரூபாய் செலவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி மும்முரம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே நிலையம் பிரிவு வரை 450 மீட்டர் தூரம் சாலையில் மழைக்காலங்களில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பொது மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாக பேரூராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன
இதையடுத்து பொது மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு பேரூராட்சி தலைவர் பொன் சந்திரா கலா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். விஜயா ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் இருபுறங்களிலும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கட்டும் பணிக்காக 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது
இந்தப் பணியினை ஆய்வு செய்த பேரூராட்சி மன்ற தலைவர் சந்திரகலா செயல் அலுவலர் ஆர்.விஜயா ஆகியோர் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென உத்தரவிட்டார்