சோழவந்தான் ஜுன் 6
சோழவந்தான் அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் துர்க்கையம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மே.29.ல் செவ்வாய் சாட்டுதலுடன் பக்தர்கள் விரதம் மேற்கொண்டநிலையில் கணபதி ஹோமத்துடன் நடந்து அம்மன் தாமிர கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைததொடர்ந்து ஜுன் 3.ந்தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு சாத்தப்பட்டு பூச்சொரிதல் விழா நடந்தேறியது.ஜுன் 4.ந்தேதி துர்க்கையம்மன் சிம்மவாகனத்தில் நீரேத்தான் கிராமத்திலிரிந்து. மேட்டுநீரேத்தானுக்கு ஊர்வலமாக எடுத்து சென்று ஊர் மந்தையில் வைத்தனர் அப்போது கிராம மக்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இதன் அன்று நள்ளிரவில் அம்மன் கோவிலை அடைந்தது. ஜுன் 5..ந்தேதி நேற்று காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.பின்னர்.
கோவில் முன்பு .பெண்கள் மாவிளக்கு எடுத்தனர்.இதன்பின் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வமாக சென்று கோவிலை அடைந்தனர்.அன்று மாலை பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இவ்விழாவை யொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை நீரேத்தான்மேட்டுநீரேத்தான் கிராம பொதுமக்கள் செய்திருந்தனன்.